சிறப்புப் பயிற்சிப் பட்டறை

ஜொகூர் தமிழ்க் கல்வியாளர் மேம்பாட்டு இயக்கம் தமிழ்மொழி ஆசிரியர்களுக்காக இயங்கலை வழி தொடர் உரையரங்கம் நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே.

ஆசிரியரிடையே தமிழ்மொழி கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் சம காலத்திற்கேற்ற அணுகுமுறைகளின் வழி கற்றலை வளப்படுத்துவதற்குமான சிறப்புப் பயிற்சியை இயங்கலைவழி நடத்தவுள்ளது.

யார் பங்கேற்கலாம்?

இப்பயிற்சிப் பட்டறையில் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற வரவேற்கப்படுகிறார்கள்.

முதல் கட்டமாக ‘வகுப்புச்சார் மதிப்பீடும் விளைபயன்மிகு பாடத்திட்டமும்’ என்ற தலைப்பில் பட்டறை வழங்கப்படும்.

முதலில் பதிவு செய்யும் 80 ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

ஏன் பயிற்சிப்பட்டறை ?

இப்பயிற்சிப் பட்டறையில் சிறப்பாக வகுப்புச்சார் மதிப்பீட்டைப் பற்றிய கருத்துமைகள், மதிப்பீட்டுக்கான சான்றுகள் திரட்டும் முறைமை, கருவிகள், நடவடிக்கைகளைப் பயன்பாட்டு நிலையில் வடிவமைக்கும் வழிவகைகள் ஆகியன விளக்கப் படும்.

வகுப்புச்சார் மதிப்பீட்டுச்சான்றுகள், 6 அடைவுநிலைகள், அவற்றைத் தெளிவாக அடையாளம் காணும் முறை, நிபுணத்துவமுறையில் திறனடைவு நிலைகளை முடிவு செய்யும் திறன் குறித்தும் சரியான வழி காட்டும் வகையில் பயிற்சிகள்
அளிக்கப்படவுள்ளன.

பயிற்சிப் பட்டறையில் பாடத்திட்டத்தின்வழி வகுப்புச்சார் மதிப்பீட்டை ஒருங்கிணைக்கும் வழிவகைகள் ஆழமாக விவாதிக்கப்படும்.
பட்டறையின் போது விளக்கமளித்து உதவத் துறைசார்ந்த தமிழாசிரியர்கள் உடனிருப்பர்.

சிறந்த முறையில் பின்னோக்கு வடிவமைப்பைக் கொண்டு பாடத்திட்டம் உருவாக்குவது வரையிலான அனைத்துப் படிநிலைகளும் செய்முறைவழி விளக்கப்படும்.

முக்கியமாக, ஆசிரியர்கள் பயிற்றியல் தொடர்பான முடிவுகளை முன்னெடுப்பதற்கு வேண்டிய சான்றுகளைத் திரட்டும் முறைகளும் படிநிலைகளில் விளக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

குழுமத் தொலைவரி (Telegram) வாயிலாக வழங்கப்படும் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்தபின் அனுப்பிவைக்க வேண்டும்.

பதிவுப் படிவத்தை அனுப்ப வேண்டிய இறுதிநாள் 14/09/2021 ( ஞாயிற்றுக் கிழமை).

பயிற்சிப் பட்டறை நடைபெறும் நாள் 16/09/2021 வியாழன் ( இரவு மணி 7.30 – 9.30)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.9.2021

பதிவுப் படிவம்: https://forms.gle/AminaXBNs6sx8HHY6

நன்றி.

தொடர்புக்கு :
சுரவி 0137689379
ந. தமிழ்வாணன் 0127116058