
வகுப்பறையில் மாணவர்களின் முன் பாடங்களை விளக்கக் காட்சிகளோடு நடத்தி வருகிறோம். அவ்வப்போது, அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் போன்றோர் அமர்ந்திருக்கும் ஓர் அரங்கிலும் விளக்கக்காட்சிகளோடு படைப்புகளையும் செய்து வருகிறோம் அல்லவா? இந்தப் படைப்புகளைத் தனித்துவமாக்குவதற்கும், பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்ப்பதற்கும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியக் கூறுகள் யாவை?
இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக, கடந்த சூலை 7ஆம் நாளன்று ‘கவனத்தை ஈர்க்கும் படைப்பாற்றலைப் பெறுவோம்’ என்னும் தலைப்பிலான தொடர் உரையின் முதல் அமர்வை இயங்கலை வழி நடத்தினோம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பல படைப்புகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் அளித்து வரும் முத்து நெடுமாறன், தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, நமது படைப்பு ஒரு சிறந்த படைப்பாக அமைவதற்கும், அந்தப் படைப்பின் வழி நாம் முன்வைக்கும் கருத்துகள் பார்வையாளர்களிடம் தெளிவாகச் சென்று சேர்வதற்கும், உலகின் சிறந்த மேடைப்படைப்பாளர்கள் கையாண்ட சில முக்கிய நுட்பங்களை, நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சி சூம், யூடியூப், முகநூல் ஆகிய மூன்று தளங்களில் நடத்தப்பட்டது. காணொலிப் பதிவினை இங்கே காணலாம்:
TAHNIAH DAN SYABAS KPD PIHAK PENGANJUR