ஆவணங்களை உருவாக்குவது நாம் அடிக்கடிச் செய்யும் பணிகளில் ஒன்று. ஒரு கட்டுரையாக இருக்கலாம், ஒரு படைப்பிற்குத் தேவையான வில்லைகளாக இருக்கலாம், அல்லது ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழாகவோ அதனை அறிவிக்கும் பதாகையாகவோ இருக்கலாம். இந்த ஆவணங்களை உருவாக்கும் போது, தவறாமல் தோன்றும் தலையாயக் கேள்விகளில் ஒன்று: “இதற்கு எந்த எழுத்துருவைப் பயன்படுத்துவது?”
நம்மிடம் இருக்கும் ஓர் அழகான எழுத்துருவை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாமா? எல்லா எழுத்துருக்களும் எல்லா செய்திகளுக்கும் பொருந்துமா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விளக்கங்களை வழங்கியது மூன்றாம் உரைத்தொடரின் இரண்டாம் பகுதி.
உரையில் வழங்கப்பட்ட சில இணைப்புகளையும் கீழே கொடுத்துள்ளோம்.
காணொலிகள்:
- Begining Graphic Design. Typography:
https://www.youtube.com/watch?v=sByzHoiYFX0 - Begining Graphic Design. Layout and Composition:
https://www.youtube.com/watch?v=a5KYlHNKQB8 - Readability & Legibility:
https://www.youtube.com/watch?v=74sZJ4b0_Lc - தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும். முத்து நெடுமாறன் உரை:
https://muthunedumaran.com/2019/10/27/azakiyalum-ariviyalum/
சிறப்பு